உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 84 லட்சத்தைத் தாண்டியது!

DIN


உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 84 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 4.51 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனாவால் 84,06,195 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,51,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். 44,15,875 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 22,34,471 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,19,941 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 9,60,309 பேரும், ரஷ்யாவில் 5,53,301 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 3,67,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,262 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT