முகப்பு
உலகம்

முகக்கவசம் அணிய மறுத்த பயணியை இறக்கிவிட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளில் ஒன்றான முகக்கவசம் அணிய மறுத்த பணியை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளது.

Updated On : 19 ஜூன், 2020 at 2:25 PM
பகிர்:


வாஷிங்டன்: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளில் ஒன்றான முகக்கவசம் அணிய மறுத்த பணியை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளது.

முன்னாள் நடிகரான பிராண்டன் ஸ்டிராகா, நியூ யார்க்கில் இருந்து டல்லாஸ் செல்லும் விமானத்தில் ஏறினார். அவரை முகக்கவசம் அணியுமாறு ஊழியர்கள் வலியுறுத்தினர். ஆனால், முகக்கவசம் அணிய மறுத்ததால், அவரை விமானத்தில் இருந்து இறங்குமாறு ஊழியர்கள் கூறிவிட்டனர்.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கியுள்ளது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்.

Advertisement

இது குறித்து ஸ்டிராகா கூறுகையில், முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.