உலகம்

சிங்கப்பூரில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு; நேற்று 142 பேருக்கு தொற்று

DIN

சிங்கப்பூரில் புதிதாக 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு சமூகப் பரவலால் தொற்று ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வந்த ஒருவருக்கு  கடந்த ஜூன் 6ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,615 ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதுவரை 32,712 பேர் குணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில், கடந்த ஒரு சில தினங்களாக பாதிப்பு குறைந்துள்ளது முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி 151 பேருக்கு தொற்று உறுதயானதே குறைவாக இருந்த நிலையில், இன்று பாதிப்பு மிகவும் குறைவாக(142) பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இடையே விவகாரத்தா?

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT