உலகம்

நாஜிகள் பயன்படுத்திய சின்னம்: டிரம்ப் விளம்பரங்களை நீக்கியது முகநூல்

DIN

வாஷிங்டன் : அரசியல் கைதிகளைக் குறிக்க நாஜிகள் பயன்படுத்திய சிகப்பு நிற முக்கோணச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விளம்பரத்தை முகநூல் பக்கம் நீக்கியுள்ளது.

நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் வகையில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக விளம்பரம் நீக்கப்பட்டதாக முகநூல் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது அரசியல் சிறைக் கைதிகளை அடையாளம் காண நாஜி படைகளால் சிகப்பு நிற முக்கோணச் சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

தொழிலாளர்கள், இடதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள், அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தப்பட்டது ஆன்டிஃபா அமைப்பு. இதனை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

அது தொடர்பான விளம்பரங்கள் டொனால்ட் டிரம்ப் சார்பில் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அதில், அமெரிக்காவில் கருப்பின இளைஞர், அமெரிக்கக் காவல்துறையினரால் கொல்லப்பட்டதற்கு எதிராக நியூ யார்க், வாஷிங்டன் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுக்குப் பின்னணியில் ஆன்டிஃபா என்ற அமைப்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்ததோடு, கருப்பின மக்களுக்கு ஆதரவாக நடந்த இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் சூறையாடல் சம்பவங்களின் பின்னணியில் ஆன்டிஃபா அமைப்பு இருப்பது நிரூபணமாகியிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால், பொதுமக்கள் தங்கள் பெயரை பதிவு செய்து, அமெரிக்க அதிபருக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று பதிவிடப்பட்டிருந்தது.

ஆன்டிஃபா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது தொடர்பாக முகநூல் பக்கத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டது.  இந்த விளம்பரங்களைத் தொடர்ந்து சிவப்பு முக்கோண சின்னம் இடம்பெற்றிருந்தது. இந்த சிவப்பு முக்கோணச் சின்னம், ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் இதர அரசியல் கைதிகளை அடையாளம் காணும் வகையில் நாஜி படைகளால் பயன்படுத்தப்பட்டதாகும்.

இதையடுத்து, தனது நிறுவனத்தின் கொள்ளைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி முகநூல் நிறுவனம் அந்த விளம்பரங்களை நீக்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப், இந்த முக்கோணச் சின்னத்தின் அடையாளத்தை உணர்ந்தே, அதை மீண்டும் அதே அர்த்தத்துடன் பயன்படுத்தியுள்ளாரா என்பது சரியாக தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT