உலகளவில் கரோனா பாதிப்பு 
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 90.51 லட்சத்தைத் தாண்டியது!

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 90.51 லட்சத்தைத் தாண்டியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 90.51 லட்சத்தைத் தாண்டியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 22-ம் தேதி நிலவரப்படி 90.51 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகளவில் கரோனாவால் 90,51,535 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,70,804 பேர் மரணம் அடைந்துள்ளனர். 48,41,948 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 23,56,657 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,22,247 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 10,86,990 பேரும், ரஷ்யாவில் 5,84,680 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 4,26,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,703 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT