முகப்பு
உலகம்

புதிய காலத்தில் புதிய சீன-ஐரோப்பிய உறவு

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் இணையம் மூலம் 22ஆம் நாளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இணையம் மூலம் 22ஆம் நாளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மா மண்டபம்

பேச்சுவார்த்தைக்கு முன் கொவைட்-19 நோய் பரவல் தொடங்கிய பிறகு, அவர் வெளிநாட்டுத் தலைவர்களுடன் நடத்திய 5வது பேச்சுவார்த்தை இதுவாகும். போதிய புரிந்துணர்வு மற்றும் பொதுக் கருத்தானது ஒத்துழைப்புக்கான முன்னிபந்தனையாகும்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

கொவைட்-19 நோய் உலகளவில் பரவி வரும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நோய் பாதிப்பு குறித்து இரு தரப்புகளின் தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இச்சிக்கலான நிலைமையைச் சமாளிக்கும் விதம் நெருக்கடியிலிருந்து புதிய வாய்ப்புகளைத் தேடிப்பார்க்க வேண்டும் என்று தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

 சீனாவும் ஐரோப்பாவும் உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் சக்தியாகவும், உலக வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றும் சந்தைகளாகவும் மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த ஷிச்சின்பிங், பல தரப்புவாதத்தில் ஊன்றி நின்று, உலக மேலாண்மையை மேம்படுத்தும் நாகரிகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

சீன-ஐரோப்பிய சரக்கு போக்குவரத்து

இரு தரப்புகளுக்கு இடையிலான இத்தகைய முக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரல் இரு தரப்பு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் உலகச் செல்வாக்கை விரிவாக்கி சிக்கலில் சிக்கியுள்ள உலகிற்கு உறுதியாக மாபெரும் ஆற்றலை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →