உலகம்

பாகிஸ்தானில் ஒரேநாளில் 3,892 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 60 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,892 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,88,926 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 3755  ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 77,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,337 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 72,656, பஞ்சாப் - 69,536, கைபர்-பக்துன்க்வா- 23,388, இஸ்லாமாபாத் - 11,483, பலுசிஸ்தான்- 9,634, கில்கித்-பல்திஸ்தான்- 1,337 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 23,380 மாதிரிகள் உள்பட இதுவரை 11,50,141 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் ஆசிரியர் உள்பட மூவர் கைது

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

SCROLL FOR NEXT