முகப்பு
உலகம்

இந்தியாவிற்கு ஆர்சிஈபி மீண்டும் அழைப்பு

பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கை பற்றிய அமைச்சர்கள் நிலைக் கூட்டம் 23ஆம் நாள் காணொலி மூலம் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடவுள்ளதாக 15 உறுப்ப

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கை பற்றிய அமைச்சர்கள் நிலைக் கூட்டம் 23ஆம் நாள் காணொலி மூலம் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடவுள்ளதாக 15 உறுப்பு நாடுகளும் தெரிவித்தன.

இவ்வுடன்படிக்கை, உலகின் மிகப் பெரிய தடையில்லா வணிக மண்டல உடன்படிக்கையாகும். இவ்வாண்டுக்குள் இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிடுவது முக்கியமானது என்று சீன வணிக அமைச்சர் சுங்சான் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தொடர்புடைய பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு இந்த உடன்படிக்கையைச் சேர்ந்த 15 உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியான் அமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான வியட்நாம் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கியது. ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகள், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்களும், ஆசியான் அமைப்பின் பொதுச் செயலாளரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

தகவல் சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.