உலகம்

உலகளவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது!

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சீனாவில் ஹூகான் மகானாத்தில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 24-ம் தேதி நிலவரப்படி 93.59 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகளவில் கரோனாவால் 93,59,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,79,879 பேர் மரணம் அடைந்துள்ளனர். 50,46,272 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 24,24,418 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,23,475 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,15,479 பேரும், ரஷ்யாவில் 5,99,705 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 4,56,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14,483 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT