உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியையும் பலி 5 லட்சத்தையும் நெருங்குகிறது

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைத் தாண்டி ஒரு கோடியை நெருங்குகிறது, மற்றொரு பக்கம் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 27-ம் தேதி நிலவரப்படி 99.26 லட்சத்தைத் தாண்டியுள்ளது.  

உலகளவில் கரோனாவால் 99,26,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,97,357 பேர் மரணம் அடைந்துள்ளனர். 53,75,532 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 25,53,068 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,27,640 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 12,80,054 பேருக்கு கரோனா பாதித்து, 56 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

ரஷ்யாவில் 6,27,646 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 5,10,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,703 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT