முகப்பு
உலகம்

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்து: காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். 

Updated On : 5 மார்ச், 2020 at 2:14 PM
பகிர்:

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள மைதானத்தில் இருந்து இன்று காலை காவல்துறை தலைவர் ஆர்ச்சி கம்போவா உள்ளிட்டோருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.

ஆனால் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர்மின்னழுத்த வயர் மீது உரசியதில் சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து நொறுங்கியது.

Advertisement

இதில், ஹெலிகாப்டரில் இருந்த காவல்துறை தலைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.