ஸ்பெயினில் கரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 838 பேர் பலி
ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் பலியாகியுள்ளனர்.
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
இந்நிலையில், ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 6,528 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
புதிதாக 6000 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78,797 ஆக உள்ளது.