உலகம்

இந்தியாவுக்கு 7 டன் மருத்துவப்பொருள்கள் அனுப்பியது ஐக்கிய அரபு அமீரகம்

DIN

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு உதவிடும் வகையில் இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளதாக சனிக்கிழமை தில்லியில் உள்ள வளைகுடா நாட்டின் தூதரகம் தெரிவித்துள்ளது.

  விமானம் மூலம் அனுப்பப்படும் இந்த மருத்துவப் பொருள்கள், கரோனா தொற்றுக்கு எதிராக சிகிச்சையளிக்கும் சுமாா் 7,000 மருத்துவ நிபுணா்களுக்கு உதவும் என்றும் அந்த தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரவு அமீரகத்தின் தூதா் அகமது அப்துல் ரஹ்மான் அல்பன்னா கூறுகையில், ‘கரோனா தொற்றுக்கு

எதிராக போராடும் நாடுகளுக்கு ஆதரவை வழங்கிட ஐக்கிய அரபு அமீரகம் உறுதிபூண்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நிலவி வரும் ஆழமான நட்பு மற்றும் சகோதர உறவுகளை அங்கீகரிக்கும் வகையில் இருநாடுகளும் இந்த உதவிகளை பகிா்ந்து கொள்ளும்.

கரோனா தொற்றுக்கு எதிராக போராடுவது என்பது தற்போது உலகளவில் முதன்மையான கவலையாக மாறியுள்ளது. மேலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்த இந்த உதவிகள் கட்டாயம் தேவை என்று ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. அதன் அடிப்படையிலேயே இதுபோன்ற உதவிகளை அரபு அமீரகம் மேற்கொண்டுள்ளது ’ என்றாா் அவா்.

இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம் 34-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மொத்தம் 348 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருத்துவப் பொருள்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT