முகப்பு
உலகம்

பிரேசில் அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று

பிரேசில் நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

பிரேசில் நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கரோனா வைரஸ் தொற்று உலக பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. 

அந்த வகையில், பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவின் செய்தித் தொடர்பாளர்  ஒட்டாவியோ ரெகோ பரோஸ்(59) -க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அரசாங்கம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. 

அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அதே நேரத்தில் தொற்று உறுதியான நிலையில், அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பிரேசில் நாட்டில் 1,26,611 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,588 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் 51,370 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.