உலகம்

சௌதியில் ஒரே நாளில் புதிதாக 2,442 பேருக்கு நோய்த் தொற்று

DIN

சௌதி அரேபியாவில் மேலும் 2,442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து இருந்தாலும், தற்பொழுது வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. 

இந்த நிலையில் சௌதி அரேபியாவில் மேலும் 2,442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,161 ஆக உயர்ந்துள்ளது. 

மற்றொரு புறம் அங்கு நோயின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2,233 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த குணமடைந்தவர்வர்களின் எண்ணிக்கை 41,236 ஆக உள்ளது. 

மேலும் அந்த வைரஸால் இதுவரை 379 பேர் பலியாகினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT