முகப்பு
உலகம்

அமைதியான தூதாண்மைக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சீனா

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் தற்போது பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் தற்போது பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ  செய்தியாளர்களைச் சந்தித்து, சீன-அமெரிக்க உறவு, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு, கரோனா வைரஸின் மூலக்கூறு தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

சீன-அமெரிக்க உறவு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விளுக்குப் பதிலளிக்கையில் வாங்யீ கூறியாவது

சீன-அமெரிக்க உறவு, பன்னாட்டுக் குவிமையமாகும். இவ்வாண்டு, இரு தரப்புறவில் கொவைட்-19 நோய் பரவலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  கொவைட்-19 நோய்,  சீனா மற்றும் அமெரிக்காவின் பொதுவான எதிரியாகும். நோய் பரவத் தொடங்கியதில் இருந்தே, அமெரிக்க மக்கள் சீனாவுக்கு உதவி அளித்துள்ளனர். அமெரிக்காவில் இத்தொற்று நோய் பெருமளவில் ஏற்பட்ட பிறகு, சீனாவின் பல துறைகளும் அமெரிக்காவுக்கு உதவி செய்து பல மருத்துவப் பொருட்களை நன்கொடையாக அளித்துள்ளன. ஆனால், கரோனா வைரஸ் பரவலைத் தவிர, அரசியல் வைரஸும் அமெரிக்காவில் பரவி வந்துள்ளது. அதாவது,  இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சீனா மீது அவதூறு  பரப்ப அமெரிக்காவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முயன்று வருகிறனர் என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், சீனாவும் அமெரிக்காவும், மூன்று விசயங்களை செய்வது அவசியமானது என்று வாங்யீ கருத்து தெரிவித்துள்ளார்.  ஒன்றுக்கு ஒன்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அனுபவங்களைப்  பகிர்ந்து கற்றுக்கொள்வது,  நோய்க்கு எதிரான பலதரப்பு ஒத்துழைப்புகளை முன்னெடுத்து செல்வது,  தொற்று நோயினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைக்கும் வகையில் இருதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி இரு நாடுகளும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அமெரிக்காவை மாற்றும் எண்ணம் எதுவும் சீனாவுக்கு இல்லை. அதேசமயம், நவீனமயமாக்கத்தை நோக்கி 140 கோடி சீன மக்களும் காலடி எடுத்து வைத்துள்ளதை அமெரிக்காவால் தடுக்க முடியாது என்று வாயீங் கூறினார்.

கொவைட்-19 வைரஸ் தோற்றம் குறித்து வாங்யீ பேசுகையில், 

கொவைட்-19 தொற்று நோய் உருவான காரணம் குறித்த சர்வதேச அறிவியல் ஆய்விற்கு சீனா திறந்த மனப்பான்மையோடு செயல்படும். இவ்வைரஸின் மூலக்கூறு பற்றி அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களால் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாய்வின் போது தொழில்முறை, நியாயம், ஆக்கப்பூர்வமான போக்கு ஆகிய கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்தப்பணி  உலக சுகாதார அமைப்பின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு அரசியல் தலையீடு இல்லாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது, கொவைட்-19 தொற்று நோய் மூலம் சீனாவுக்கு எதிராக சில நாடுகள் வழக்கு தொடுத்திருப்பதில் உண்மையோ, சட்ட ரீதியிலான ஆதாரமோ ஏதுவும் இல்லை. மேலும், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மட்டுமே, தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான மிக வலிமையான ஆயுதமாகும் என்று வாங்யீ குறிப்பிட்டார்.

சீனா-ஜப்பான்-தென்கொரியா இடையேயா உறவு குறித்து, வாங்யீ பேசியபோது,

கொவைட்-19 தொற்று நோய் பாதிப்பைச் சமாளிப்பதற்கு, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். இதற்காகத் தடையில்லா வர்த்தகத்தைக் கடைப்பிடித்து, சுங்க வரியைக் குறைத்து,  தடை நீக்கம் செய்ய வேண்டும். சீனா-ஜப்பான்-தென்கொரியா இடையேயான தடையில்லா வர்த்தகப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி, இவ்வாண்டுக்குள் விரிவான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (RCEP) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாடுபடு என்று வாங்யீ தெரிவித்தார்.

அமைதியான தூதாண்மைக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சீனா  எப்போதும், அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி என்ற குறிக்கோள்களுடன், பல்வேறு நாடுகளுடன் நட்பார்ந்த ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகிறது என்று வாங்யீ தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →