உலகம்

சீன அறிவியலாளர்களின் விண்வெளிப் பயணம் 

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணின் பொது வடிவமைப்பாளர் சோ ஜியான்பிங், மே 24ஆம் நாள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின்

DIN

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணின் பொது வடிவமைப்பாளர் சோ ஜியான்பிங், மே 24ஆம் நாள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசியக் கமிட்டியின் 3வது  கூட்டத்தொடருக்கான காணொளி பேட்டியில், 3வது தொகுதியான விண்வெளி வீரர்கள் தேர்வில் விமானிகள் மட்டுமல்ல, பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களும் இடம்பெற உள்ளனர் என்றார். 

மேலும், அறிவியலாளர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு சிறப்பு துறைசார் அறிவுகளைப் பயன்படுத்தி, முன்னேறிய ஆய்வுச் சாதனங்களை இயக்கி, விண்வெளி நிலையத் திட்டத்தை மேம்படுத்துவது 3வது தொகுதி விண்வெளி வீரர் தேர்வின் நோக்கமாகும். இத்தேர்வு வரும் ஜூலை திங்களுக்கு முன்போ அல்லது பின்போ நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

சீன விண்வெளி நிலையக் கட்டுமானத்துடன் தொடர்புடைய 11 ஏவுதல் திட்டங்கள் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். உயிரின அறிவியல், அடிப்படை இயற்பியல், வானியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த அறிவியல் ஆய்வுச் சாதனங்கள்  இந்த விண்வெளி நிலையத்தில் அதிகமாக அமைக்கப்படும். இதன் மூலம் புதிய தோற்றப்பாடு மற்றும் விதிமுறைகள் பலவற்றை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT