உலகம்

வதந்தி புயலில் சிக்கிய வூஹான் ஆய்வகம்!

DIN

கொவைட்-19 நோய் தொற்று ஏற்பட்ட பிறகு, வூஹான் மக்கள் தொற்று நோய்க்கு எதிராக கடுமையாக போராடி வந்தனர்.

ஆனால், இந்த கட்டான நேரத்தில், அமெரிக்க நாடாளுமன்றச் செனட் அவை உறுப்பினர் ஒருவர்,  வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் கசிந்தது என்ற சதித் திட்டத்தைப் பரப்பினார்.  இதனால், வுஹான் ஆய்வகம், வதந்திப் புயலின் மையத்திற்குள் சிக்கியது என்று  வுஹான் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யுவான்ஸிமிங் சி.ஜி.டி.என் தொலைக்காட்சிச் செய்தியாளருக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

வுஹான் ஆய்வகத்தின் வசதிகள் மற்றும் மேலாண்மைத் திறன்,  தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இயங்கி வரும் ஆய்வகங்கள் போலவே ஒரே மாதிரியில் காணப்படுகின்றன. வுஹான் ஆய்வகம் எப்போதும் கண்டிப்பான முறையிலும் சட்டப்படியாகவும் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில், வைரஸ் கசிவு, வைரஸ் பணியாளருக்கு பரவல் போன்ற விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்று யுவான்ஸிமிங் குறிப்பிட்டார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT