முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,636 பேருக்குத் தொற்று: மேலும் 57 பேர் பலி

பாகிஸ்தானின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,636 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்த மொத்த பாதிப்பு 64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

பாகிஸ்தானின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,636 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்த மொத்த பாதிப்பு 64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் வேகமாகப் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் பல மடங்காக உயர்ந்து வருகின்றது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரே நாளில் 57 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,317 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,636 பேருக்குத் தொற்று பரவியுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 64,028 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சிந்துவில் 25,309, பஞ்சாபில் 22,964, கைபர்-பக்துன்க்வாவில் 8,842, பலூசிஸ்தானில் 3,928, இஸ்லாமாபாத்தில் 2,100, கில்கிட்-பால்டிஸ்தானில் 658, மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 227 வழக்குகள் கண்டறியப்பட்டதாகத் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 22,305 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,931 கரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 5,20,017 சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், கரோனா வைரஸ் காரணமாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பெஷாவரில் வியாழக்கிழமை உயிரிழந்தார். கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்கு முதல் ஊடகவியாளர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.