முகப்பு
உலகம்

துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
Turkey's earthquake toll rises to 76
பகிர்:

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தெரிவித்துள்ளது. 

துருக்கி நாட்டின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. 

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டட இடுபாடுகளில் சிக்கி இதுவரை 43 போ் உயிரிழந்தனா். 

இந்த நிலநடுக்கத்தால் 962 பேர் காயமடைந்துள்ளனர். 743 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர் மற்றும் 219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், இஸ்மீர் நகரில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, போர்வை உள்பட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது. 

இடிபாடுகளில் சிக்கிய 105 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →