முகப்பு
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (கோப்புப்படம்)
உலகம்

அமெரிக்கத் தேர்தல்: பென்சில்வேனியாவிலும் ஜோ பிடன் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா மாகாணத்தைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் முன்னணியில் உள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (கோப்புப்படம்)
பகிர்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா மாகாணத்தைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் முன்னணியில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அதிபருமான டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அலாஸ்கா, நெவாடா, வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் முன்னணியில் உள்ளார். பென்சில்வேனியாவில் ஜோ பிடன் 32,95,319 (49.4%) வாக்குகளையும் டிரம்ப் 32,89,725 (49.3%) வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜோ பிடன் டிரம்பை விட 5594 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 அவை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டிரம்ப் 214 அவை வாக்குகளையும், பிடன் 264 அவை வாக்குகளையும் பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →