ஜோ பிடன் வெற்றி: அமெரிக்காவில் கொண்டாட்டம்
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்ற வெற்றியை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகம்ஜோ பிடன் வெற்றி: அமெரிக்காவில் கொண்டாட்டம்
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்ற வெற்றியை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்ற வெற்றியை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சியாட்டில், வாஷிங்டன் டி.சி. போன்ற இடங்களில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பைக் கிண்டலடித்து, நீங்கள் தூக்கியெறியப்பட்டு விட்டீர்கள் என்று மக்கள் முழக்கமிட்டனர்.
ஜோ பிடன் வெற்றிச் செய்தி பரவத் தொடங்கியதுமே லாஸ் வேகாஸ் நகரில் மெக்சிக - அமெரிக்கர்களான பிடன் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
இதேபோல, அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸில் சிறுசிறு குழுக்களாகத் திரண்ட ஜோ பிடன் ஆதரவாளர்கள் அவருடைய வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
அமெரிக்கா முழுவதும் பரவலாக அதிபர் (தேர்வு) ஜோ பிடன், துணை அதிபர் (தேர்வு) கமலா ஹாரிஸ் ஆகியோரின் வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.