அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவு
அமெரிக்காவின் நெவாடா மினா பகுதியில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நெவாடா மினா பகுதியில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நெவாடா மினா பகுதியின் தென்கிழக்கே 34 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கு நெவாடா மற்றும் கலிபோர்னியாவின் சியரா மலைப்பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.