உலகம்

87 மணி நேரத்தில் 7 கண்டங்களுக்குப் பயணம்: புதிய சாதனை படைத்த அமீரகப் பெண்

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மருத்துவரான ஹவ்லா அல் ரோமைதி 87 மணி நேரத்தில் 7 கண்டங்களுக்குப் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹவ்லா அல் ரோமைதி. இவர் மிகக்குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர் எனும் புதிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இந்த வருடத்தின் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் 3 நாள்கள் 14 மணி நேரம் 46 நிமிடம் 48 விநாடிகளில் மொத்தம் 7 கண்டங்களைக் கடந்து பயணம் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தனது பயணத்தை முடித்ததன் மூலம் புதிய சாதனையைப் படைத்தார்.

ரோமைதி தனது பயணத்தில் மொத்தம் 208 நாடுகளைக் கடந்துள்ளார். மிகவும் சவாலான இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது குறித்து ரோமைதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT