முகப்பு
உலகம்

ரஷியாவில் உச்சத்தைத் தொட்ட ஒருநாள் பாதிப்பு; புதிதாக 24,318 பேருக்கு தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 20 நவம்பர், 2020 at 3:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

ரஷியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக அந்த நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 24,318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 20,39,926 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 461 பேர் உள்பட இதுவரை 35,311 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 15,51,414 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,53,201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,902 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டு சுகாதாரத் துறை மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் 23,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.