முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 27,100 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,100 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2020 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,100 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,42,633 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 5,724 பேருக்கு (21.1 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

மேலும் 510 பேர் நோய்த் தொற்றால் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 39,068 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27,296 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,39,470 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் அதிகம் பாதிப்பு எண்ணிக்கைகளைக் கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷியா 4-வது இடத்தில் உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.