முகப்பு
உலகம்

ரஷியாவில் மேலும் 27,100 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,100 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
ரஷியாவில் மேலும் 27,100 பேருக்கு கரோனா
பகிர்:


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,100 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 27,100 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக பதிவாகி வருகின்றது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2,24,2,633 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியாவில் கடந்த இரு தினங்களாக ஒருநாள் பலி எண்ணிக்கை 500யைத் தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 510 பேர் உள்பட இதுவரை 39,068 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதுவரை 1,73,9,470 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 27,296 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.