உலகளவில் கரோனா பாதிப்பு 6.30 கோடியாக உயர்வு
உலகளவில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6,30 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6,30 கோடியைத் தாண்டியுள்ளது.
நவ.30-ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு இதுவரை 14,65,186 பேர் உயிரிழந்துள்ளனர். 4,35,46,236 போ் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,80,61,483 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Advertisement
உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,37,50,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,73,072 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 81,07,203 பேர் குணமடைந்துள்ளனர், 53,70,129 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.