அமெரிக்காவில் தொடர்ந்து 27-வது நாளாக 1 லட்சத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் தொடர்ந்து 27-வது நாளாக 1 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் தொடர்ந்து 27-வது நாளாக 1 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வெளியான சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,84,650 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2,66,875 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நாடு அமெரிக்கா. அதிகம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை என இரண்டிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
Advertisement