முகப்பு
உலகம்

'காணொலி விவாதத்தில் பங்கேற்கமாட்டேன்': அதிபர் டிரம்ப்

அதிபர் தேர்தலையொட்டி வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த காணொலி விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கோப்புப் படம்.
பகிர்:

அதிபர் தேர்தலையொட்டி வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த காணொலி விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். 

டிரம்ப் உடன் துணை அதிபர் பதவியில் மைக் பென்ஸும், ஜோ பிடனுடன் கமலா ஹாரீஸும் போடியிடுகின்றனர். இதில் புதன்கிழமையான நேற்று துணை அதிபர்களுக்கு இடையிலான விவாதம் நடைபெற்றது.

இதற்கு முன்பு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே செப்டம்பர் 29-ஆம் தேதி பொது விவாதம் நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்ப்பும், ஜோ பிடனும் கலந்துகொண்டு விவாதித்தனர். இதில் அதிபர் டிரம்பிற்கு பின்னடைவு ஏறபட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டு விவாதங்கள் நடைபெற உள்ளன.

இதனிடையே அதிபர் டிரம்பிற்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனால் இருவரும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது குணமடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வந்துள்ளதால் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே      மியாமியில் வரும் 15-ஆம் தேதி இரண்டாவது விவாதமும், மூன்றாவது விவாதம் டென்னஸியில் 22-ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்துள்ளதால், அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவிவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.