கோப்புப்படம் 
உலகம்

ரஷியாவில் புதிதாக 15,000 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிதாக 15,099 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


ரஷியாவில் புதிதாக 15,099 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையைக் (14,922) காட்டிலும் இது கூடுதலாகும். 

இதைத் தொடர்ந்து, ரஷியாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,99,334 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 3,996 (26.5 சதவிகிதம்) பேருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை. அதிகபட்சமாக மாஸ்கோவில் 4,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 185 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,187 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,70,576 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

SCROLL FOR NEXT