உலகம்

அமெரிக்காவில் தொற்று பலி 1.89 லட்சத்தைக் கடந்தது

DIN

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1 லட்சத்து 89 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,211 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,90,737-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,090 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,89,964 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 7,21,796 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 13,323 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,52,228    பேரும், புளோரிடாவில் 6,33,442 பேருக்கும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர நியூயாா்க்கில் 4,68,230     பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT