முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 4,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் 114 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 4,995 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 114 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் புதிதாக 4,995 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 114 பேர் பலியாகியுள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 4,995 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,09,995 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் உள்பட இதுவரை 17,528 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 8,26,935 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 1,65,532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. ரஷியாவில் பாதிப்பு அதிகம் இருந்தாலும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.