ரஷியாவில் புதிதாக 5,110 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 121 பேர் பலி
ரஷியாவில் புதிதாக 5,110 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 121 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் புதிதாக 5,110 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 121 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 5,110 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,15,105 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் உள்பட இதுவரை 17,649 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போது வரை 8,32,747 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 1,64,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.