பாகிஸ்தானில் புதிதாக 394 பேருக்கு கரோனா பாதிப்பு
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானிலும் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 394 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,98,903-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 2,80,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 601 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சிந்துவில் 1,30,671 பேரும், பஞ்சாபில் 97,226 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 36,625 பேரும், இஸ்லாமபாத்தில் 15,750 பேரும், பலுசிஸ்தான் பகுதியில் 3,008 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,331 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,345-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,980 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,77,8,689 ஆக உள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.