முகப்பு
உலகம்

உக்ரைன்: இதுவரை இல்லாத அதிகபட்ச பலி

உக்ரைனில் கடந்த இதுவரை இல்லாத அதிகபட்ச கரோனா பலி செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

Updated On : 8 செப்டம்பர், 2020 at 10:58 PM
ukr_0809chn_1
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:47 PM

உக்ரைனில் கடந்த இதுவரை இல்லாத அதிகபட்ச கரோனா பலி செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 2,877-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,174 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,068-ஆக உயா்ந்துள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 62,606 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

Advertisement

72,585 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 177 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.