உலகம்

அமெரிக்கா: 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கரோனா

DIN

அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே அமெரிக்க குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், மொத்த பாதிப்பில் 9.8 சதவிகித குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 5,13,415  குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஒருலட்சம் கரோனா பாதிப்பில் 680 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 70,630 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 16 சதவிகிதம் அதிகமாகும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 0.7 முதல் 3.7 சதவிகிதமாக உள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது குறைவாகவே இருந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து கண்டறிவதற்காக பரிசோதனை, கண்காணிப்பு, இறப்பு உள்ளிட்டவை வயது வாரியாக கணக்கெடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 63,59,313-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,90,796-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT