முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 526 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 526 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 526 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,01,481-ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு 5,673 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதிதாக 893 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,429-ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கரோனா பாதிப்பில் சிந்து மாகாணத்தில் 1,31,880 பேரும், பஞ்சாபில் 97,679 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 36,942 பேரும், இஸ்லாமபாத்தில் 15,901 பேரும், பலூசிஸ்தானில் 13,483 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2400 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 6 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 6,379-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →