அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,591 பேர் மரணம்
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4,591 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4,591 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை 8 மணி முதல் கடந்த 24 மணி நேரத்தில் 4,591 பேர் மரணம் அடைந்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழம் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,569 பேர் மரணம் அடைந்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், நேற்று உயிரிழப்பு கடுமையாக உயர்ந்து நான்கு ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
Advertisement
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 78 ஆயிரமாகவும், மொத்த உயிரிழப்பு 34 ஆயிரமாகவும் உள்ளது. இதுவரை 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை எட்டியுள்ளது. பலி எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரமாக உள்ளது.