ஜெர்மனியில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியது!
ஜெர்மனியில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,000 ஐ எட்டியுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,000 ஐ எட்டியுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 289 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,093 ஆக உள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 3,382 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,38,135 ஆக உயர்ந்தது. மேலும், அந்நாட்டில் 82,000 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்றுகளில் ஐந்தாவது மிக உயர்ந்த எண்ணிக்கையை ஜெர்மனி கொண்டுள்ளது.
Advertisement