முகப்பு
உலகம்

உலகம் முழுவதும் கரோனா பலி எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்தது!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2.53 கோடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,53,83,993 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,50,588 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் கரோனா பாதித்தோரில் 1,77,06,667 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் தற்போது 68,26,738 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 61,104 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 61,73,236 பேரும், பிரேசிலில் 38,62,311 பேரும், இந்தியாவில் 36,19,169 பேரும், ரஷியாவில் 9,90,326 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர். 

முழு கட்டுரையைப் படிக்க →