முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 1,226 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,73,112 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,226 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,73,112 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
கோப்புப்படம்
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,226 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,73,112 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,226 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,112 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,822 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,37,434 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1,267 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,17,598, பஞ்சாப் - 91,901, கைபர்-பக்துன்க்வா- 33,220, இஸ்லாமாபாத் - 14,841, பலுசிஸ்தான்- 11,578, கில்கித்-பல்திஸ்தான்- 1,952 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23,254 உள்பட இதுவரை 18,68,180 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு 2000-க்கும் கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →