முகப்பு
உலகம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாவூத் இப்ராஹிமுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் பிறந்த தாவூத் இப்ராஹிம், இந்தியாவுக்கு வெடிபொருள்களை கடத்தி வருதல், குண்டுவெடிப்புகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக 1993ஆம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் கடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பர் உயிரிழந்த விவகாரத்தில் தாவூத் இப்ராஹிம் முக்கியக் குற்றவாளியாவார். 

இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இவர் தற்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →