முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,16,934 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,16,934 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 8 அக்டோபர், 2020 at 12:17 PM
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

பாகிஸ்தானில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,16,934 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,544 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று இதுவரை 3,02,375 பேர் குணமடைந்துள்ளனர். 497 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 31,168 உள்பட இதுவரை 37,61,389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் சிந்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப், கைபர்-பக்துன்க்வா மாகாணங்கள் இடம்பெற்றுள்ளன.

மாகாண வாரியாக பாதிப்பு விவரங்கள்:

சிந்து - 139,195, பஞ்சாப் - 100,272, கைபர்-பக்துன்க்வா- 38,175, இஸ்லாமாபாத் - 17,009, பலுசிஸ்தான்- 15,460 , கில்கித்-பல்திஸ்தான்- 3,886 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 2,937 பேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.