பெர்லின் மருத்துவமனையில் தீ விபத்து: ஒருவர் பலி, 5 பேர் காயம்
பெர்லினில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
உலகம்பெர்லின் மருத்துவமனையில் தீ விபத்து: ஒருவர் பலி, 5 பேர் காயம்
பெர்லினில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
பெர்லினில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனை ஒன்றின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் போராட்டத்துக்கு அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரிவரவில்லை.