முகப்பு
உலகம்

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி

ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானார்கள்.  

Updated On : 4 ஏப்ரல், 2021 at 8:56 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானார்கள். 
ஆப்கனின் காந்தஹார் மாகாணத்தின் உள்ள அர்கந்தாப் மாவட்டத்தில் இன்று அதிகாலை தலிபான்கன் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். 
இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலின்போது இரண்டு டாங்கிகள் மற்றும் பல வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த தாக்குதல் தொடர்பாக தலிபான்கள் தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.