முகப்பு
உலகம்

கரோனா நிலவரம்: இன்று அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.72 கோடியைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
கரோனா நிலவரம்: இன்று அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.72 கோடியைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் இதுவரை 13,72,52,621 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

அவா்களில் 29,58,629 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,04,33,163 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,38,60,829 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,03,909 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,19,90,143 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கைகை 5,76,298-ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் இதுவரை 1,36,86,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,71,089 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,35,21,409 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் அங்கு இதுவரை 3,55,031 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments