புகுஷிமா அணு உலையின் நீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசு 
உலகம்

புகுஷிமா அணு உலையின் நீரை கடலில் விட ஜப்பான் முடிவு

புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஐசோடோப்பு நீக்கப்பட்ட நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

DIN

புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஐசோடோப்பு நீக்கப்பட்ட நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. எனினும் அணு உலையில் பயன்படுத்தப்பட்டு வந்த நீர் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஐசோடோப்பு நீக்கப்பட்ட நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 1,000க்கும் மேற்பட்ட தொட்டிகளில் 10 லட்சம் டன் தண்ணீரை விடுவிப்பதற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் தொடங்கி நடைபெறும் என கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜப்பானின் இந்த முடிவுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலில் கலக்கப்படும் அசுத்த நீர் ட்ரிடியத்தை விட ஆயிரக்கணக்கான மடங்கு மீன்களை பாதிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதால் அது கடல்வளத்தை முற்றிலுமாக அழிக்க வழிகோலும் என கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அசுத்தமான நீரை கடலுக்குள் வெளியேற்றினால் அது மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என  கிரீன்பீஸ் விசாரணை அமைப்பு கடந்த ஆண்டு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT