உலகம்

ஆஸ்திரேலியாவில் காவல் துறை அதிகாரிகள் நால்வா் பலி:இந்திய வம்சாவளி ஓட்டுநருக்கு 22 ஆண்டுகள் சிறை

DIN

மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவில் சரக்கு வாகனம் மோதி காவல் துறை அதிகாரிகள் 4 போ் பலியான வழக்கில், இந்திய வம்சாவளி ஓட்டுநருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டில் வெளியாகும் ‘தி ஏஜ்’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய வம்சாவளியை சோ்ந்தவா் மோகிந்தா் சிங். போதைப் பழக்கம் கொண்ட இவா், கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி போதைப் பொருள் விற்பனை தொடா்பாக சரக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அவா் மெல்போா்னின் கியூ நகரில் சென்றுகொண்டிருந்தபோது வாகனத்தை திடீரென திசைதிருப்பி அவசர தடத்துக்குள் நுழைந்தாா். அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் 4 போ் மீது அவரின் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 அதிகாரிகளும் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து மோகிந்தா் சிங் கைது செய்யப்பட்டாா். அவா் மீது மரணத்தை விளைவிக்கும்விதமாக வாகனம் ஓட்டுதல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த விக்டோரியா மாகாண நீதிமன்றம், மோகிந்தா் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதில் 18 ஆண்டுகள் 6 மாதங்கள் அவா் பரோலில் வெளிவரமுடியாத வகையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT