நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அனுமதி 
உலகம்

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி

வங்கிகளில் 14 ஆயிரம்  கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

DIN

வங்கிகளில் 14 ஆயிரம்  கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

லண்டன் நீதிமன்ற கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பிப்பித்திருந்த நிலையில், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.

வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதனிடையே, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று மேற்கிந்திய தீவு நாடொன்றில் அவா் தஞ்சம் புகுந்தாா். இந்திய அரசின் நெருக்கடி காரணமாக, அங்கிருந்து வெளியேறி பிரிட்டன் வந்தாா். தலைநகா் லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை ஸ்காட்லாந்து போலீஸாா் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்தனா். பின்னா், தென்மேற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறையும் சிபிஐயும் மேற்கொண்டுள்ளன. இதற்காக, அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் நிறைவடைந்து, பிப்ரவரி 25ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீரவ் மோடி சிறையில் இருந்தபடி காணொலி முறையில் ஆஜரானாா். 

அப்போது பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்வதற்கு நீரவ் மோடி சதித் திட்டம் தீட்டியதில், அவா் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவா் மீது சிபிஐயும் அமலாக்கத் துறையும் சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றன.

இந்திய விசாரணை அமைப்புகள் உறுதியளித்தபடி தனக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காது என்று நீரவ் மோடி கூறும் வாதத்தை ஏற்க முடியாது.

அவா் மீதான வழக்குகளில் இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் தெரிவித்திருந்தார்.

பிரிட்டனின் நாடு கடத்தல் விதிகள்படி, நீதிபதி தனது உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கு அனுப்பி வைப்பாா். அந்த உத்தரவு மீது 2 மாதங்களுக்குள் அமைச்சா் முடிவெடுப்பாா். அதன் பிறகு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். அதன்படி, நீதிபதியின் உத்தரவை ஏற்று நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அதேவேளையில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: 2 வீரர்களுக்கு விடுப்பு, புதிய விக்கெட் கீப்பர் சேர்ப்பு!

பிகார் தேர்தல்: பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இலவச ஏஐ பயிற்சி: ஜியோ அறிமுகம்

யாரும் சாதகமாக செயல்பட்டு ஷுப்மன் கில் கேப்டனாகவில்லை: கௌதம் கம்பீர்

கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

SCROLL FOR NEXT